தன்னை தனியாக இருக்க விடாமல் ஒரு அணில்குஞ்சு துரத்துவதால் தனக்கு உதவி செய்யும்படி ஒருவர் பொலிசாரை அழைத்துள்ளார்
ஒரு சிறிய அணில் குஞ்சு வீதியில் தன்னைத் துரத்துவதாக கடந்த வியாழக்கிழமை ஒருவரிடமிருந்து அவசர உதவிப் பிரிவுக்கு தொலைபேசி அழைப்புக் கிடைத்துள்ளது.
ஜேர்மனியில் “கார்ல்சுறுக்” நகரில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது . அந்த நபரால் அந்தச் சிறிய அணிலை விரட்ட முடியவில்லை., விரக்தி அடைந்த நிலையில் பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்.
அந்த இடத்திற்கு பொலிசார் சென்றபோது அந்த அணில்குஞ்சு அவரை தொடர்ந்தும் விரட்டிக்கொண்டிருந்ததைக் கண்டனர். தொடர்ந்தும் அவரை விரட்டிக்கொண்டிருந்த அணில்குஞ்சு களைத்துப்போய் தூங்கிவிட்டது.
தன் தாயைப் பிரிந்த அந்த அணில்குஞ்சு அடைக்கலம் தேடியே அந்த நபரைத் துரத்தியுள்ளது. இந்த அணில்குஞ்சுகள் தங்கள் தாயைத் தொலைத்துவிட்டால் இப்படியான செயலில் ஈடுபடுவதாக பொலிஸ் பேச்சாளர் “கிறிஸ்டினா கிறென்ஸ்” தெரிவித்துள்லார்.
அந்த அணில் குஞ்சிற்கு “:கார்ல் –பிறைட்றிஜ்” எனப் பெயர் சூட்டி பொலிசார் வாக்குமுலம் பதிவு செய்துள்ளனர். இந்த அணில் குஞ்சிற்கு இதுதான் பொருத்தமான பெயர் என்றும் இது மிகவும் வேடிக்கையான நிகழ்வு என்று பொலிசார் கூறியுள்ளனர்.
பொலிஸ் பாதுகாப்பில் இருந்த அந்த அணில்குஞ்சு மிருகங்களை காப்பாற்றும் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அது மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாகவும்., மேலும் இரண்டு அணில்குஞ்சுகள் இப்படியான நிலையில் கைப்பற்றப்பட்டு அந்த மிருகங்கள் கப்பாற்றும் நிலையத்தில் பராமரிக்கப்படுவதாக “கார்ல்சுறுக்” நகர பொலிசார் கூறியு:ள்ளனர்