ஹமில்ரன் நகரில் வீட்டுக்கூரை மேல் நின்றிருந்த குழந்தை ஒன்றை சிரியா அகதி ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
சிரியா நாட்டைச் சேர்ந்த “காலிட்” என்ற 18 வயதான இளைஞர் தனது தந்தையுடன் ஹமில்ரன் நகரில் காரில் சென்று கொண்டிருந்தபோது “கிங்“ வீதி யில் கிழக்குப் பகுதியில் “டயப்பர்” மட்டும் அணிந்த நிலையில் குழந்தை ஒன்று இரண்டாவது மாடியின் கூரையில் நின்று தவிப்பதைக் கண்டுள்ளார்.
தூக்கத்திலிருந்து விழித்த குழந்தை இரண்டாவது மாடியில் யன்னலூடாக கூரையில் இறங்கி திரும்பவும் உள்ளே செல்ல முடியாமல் சுவரைப்பிடித்தபடி நின்றுகொண்டிருந்தது.
காரை நிறுத்தும்படி தனது தந்தையை கேட்டுக்கொண்ட “காலிட்” அந்த வீட்டின் கதவிலும் , யன்னலிலும் தட்டியபோது அந்த வீட்டிலிருந்து யாரும் பதிலளிக்கவில்லை.
உடனடியாக முதலாவது மாடியில் ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் சென்ற அந்த இளைஞன் இரண்டாவது மாடிக்குச் சென்று யன்னலுடாக மீண்டும் குழந்தையை உள்ளை எடுத்துள்ளார்.
அங்கே கூடிய அயலவர்கள் குழந்தை கூரையிலிருந்து விழுந்தால் ஏந்துவதற்குத் தயாராக இருந்துள்ளனர்.
இப்படியான வீடுகளில் குழந்தைகள் உள்ளவர்களை ஜன்னல்களை பாதுகாப்பாக மூடி வைக்கும்படி ஹமில்ரன் பொலிசார் எச்சரித்துள்ளனர்.
நடந்த சம்பவத்திற்கு எந்த விசாரணையும் செய்யாத பொலிசார் காலிட் என்ற அந்த இளைஞனைப் பாராட்டியுள்ளனர்.
“காலிட்” சிரியாவிலிருந்து தனது குடும்பத்தினருடன் , ஜோர்டானுக்குச் சென்று அங்கிருந்து கனடாவிற்கு அகதியாக வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது