உலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995

சவூதியின் விமானக் குண்டுவீச்சில் குழந்தைகள் பலி

யெமென் மீது சவூதி நடத்திய விமானக்குண்டு வீச்சில்  பல குழந்தைகள் பலியாகியுள்ளார்கள்.

யெமென் நாட்டில் குழந்தைகள்  இரத்தக் காயங்களுடன்  தெருக்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பல குழந்தைகள்  புழுதிப் படலங்களுக்குள்  அசைவின்றி தெருக்களில் கிடக்கிறார்கள்.

வெள்ளைத் துணியினால் சுற்றப்பட்ட  இறந்துபோன பல குழந்தைகளின் உடல்களை வைத்தியர்கள் பெற்றுக்கொண்டுள்ளார்கள்.

அதிஸ்டவசமாக காயங்களுடன் மட்டும்  உயிர் தப்பிய குழந்தைகள் சில சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். சில குழந்தைகள்  முதுகில் பாடசாலைப் பைகள்  அணிந்தபடி இறந்து கிடக்கிறார்கள்.

அமெரிக்காவின் பின்னணியில் சவுதி அரேபியா வட யெமெனில் விமானக் குண்டுவீச்சுகளை நடத்துகிறது. கடந்த வியாழக்கிழமை நடத்திய குண்டுவீச்சில் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.. அவற்றில் பெரும்பாலனவர்கள் குழந்தைகள்.

கோடை முகாம் ஒன்றிற்கு சென்றுவிட்டு பஸ்சில் திரும்பிக்கொண்டிருந்த குழந்தைகள் மீது சவூதி விமானக் குண்டுவீச்சு நடத்தியதாக ஐ.நா  தெரிவித்துள்ளது.

இதுவரை சவூதியால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 2400 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளார்கள். 3,600 குழந்தைகள் அவயங்களை இழந்துள்ளார்கள். 1.8 மில்லியன் குழந்தைகள் வயிற்றுப்போக்கு நோயினாலும், 1.3 மில்லியன் குழந்தைகள்  நியூமோனியா நோயினாலும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறதாக ஐ..நா அறிக்கைகள் தெரிவிக்கின்றன

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கேரளாவில் 54,000 பேர் வீடிழந்துள்ள‌னர்

54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ...

This site is protected by wp-copyrightpro.com