உலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் “நைபால்” காலமானார்

நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் வி.எஸ்.நைபால் மேற்கிந்திய தீவுகளில் உள்ள ட்ரினாட் நகரில் 1932-ம் ஆண்டு பிறந்தார்.
அவரது முழுப்பெயர் முழுப் பெயர் வித்யாதர் சுராஜ் பிரசாத் நைபால் என்பது ஆகும்.

இங்கிலாந்தில் உள்ள  Oxford பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்த நைபால் லண்டனில் வசித்து வந்தார். 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய  A House for Mr Biswas   என்ற நாவல் பிரபலமான ஒன்று. 1971-ம் ஆண்டு  In a free state என்ற புத்தகத்துக்காக புக்கர் விருது வழங்கப்பட்டது. 2001-ம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது.

இவர் முதல் மனைவி பேட் 1996-ல் காலமானார். அதன்பின்னர் பாகிஸ்தான் பத்திரிகையாளர் நதிரா அல்வியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 85 வயதான நைபால் லண்டனில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானதாக அவர் மனைவி நதிரா அல்வி தெரிவித்துள்ளார். நைபாலின் மறைவுக்கு சர்வதேச எழுத்தாளர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் இலக்கிய உலகிற்கு இது பேரிழப்பு என லண்டன் பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன. சமூக ஊடகங்களிலும் நைபால் மறைவுக்கு இரங்கல் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவை குறித்து நைபால் எழுதிய an area of darkness , A wounded civilization போன்ற புத்தகங்கள் இந்தியாவை தவறான கண்ணோட்டத்தில் அணுகுவதாக சர்ச்சைகளை எழுப்பி உலக அளவில் பெரும் விவாதங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கேரளாவில் 54,000 பேர் வீடிழந்துள்ள‌னர்

54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ...

This site is protected by wp-copyrightpro.com