உலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995

ரொறொன்ரோ கடற்கரையில் நீரில் மூழ்கியவர் அடையாளம் காணப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ரொறொன்ரோவின் கிழக்குப் பகுதியிலுள்ள ஏரியில் மூழ்கி இறந்தவர்  16 வயதான்   “கைய்ல் ஹோவாட்”  முத்துலிங்கம் என  ரொறொன்ரோ வட்டார பாடசாலை சபை தெரிவித்துள்ளது.

16 வயதான “கைய்ல் ஹோவாட் “  ஸ்கார்புரோவிலுள்ள கலைக்கான வெக்ஸ்போர்ட் கொலிஜியேற் பாடசாலையில்   11ம்  தரத்தில் பூரணத்துவம் பெற்றிருக்கிறார்.   அவர் ஒரு திறமையானவரும் சிறந்த மாணவரும் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று  ரொறொன்ரோவின் கிழக்குப் பகுதியில் உள்ள “வூட்பைன்” கடற்கரையில்  சுழியினால் இழுத்துச் செல்லப்பட்டு  தண்ணீரில் தத்தளித்த  தாயையும் மகனையும் காப்பாற்ற தண்ணீரில்  குதித்த   ஹோவாட் சுழியினால் இழுத்துச் செல்லப்பட்டார். அவசர சேவைப்பிரிவினரால் தண்ணீருக்கடியிலிருந்து  மீட்கப்பட்ட ஹோவாட் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.

ஒன்ராரியோ ஏரியில் திடீரென வந்த நீரோட்டத்தினால்  ஐந்துபேர் தண்ணீருக்கடியில் இழுத்துச் செல்லப்பட்டனர். ஹோவாட் தவிர ஏனையோர் உயிராபத்திலிருந்து தப்பியுள்ளனர்.

ரொறொன்ரோ பொலிசார், தீயணைக்கும் படையினர், கடலோரப் பாதுகாப்புப் படை, கனேடிய  விமானப்படை ஆகியோர் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

 

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கேரளாவில் 54,000 பேர் வீடிழந்துள்ள‌னர்

54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ...

This site is protected by wp-copyrightpro.com