உலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995

செய்திகள்

ரொறொன்ரோ கடற்கரையில் நீரில் மூழ்கியவர் அடையாளம் காணப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ரொறொன்ரோவின் கிழக்குப் பகுதியிலுள்ள ஏரியில் மூழ்கி இறந்தவர்  16 வயதான்   “கைய்ல் ஹோவாட்”  முத்துலிங்கம் என  ரொறொன்ரோ வட்டார பாடசாலை சபை தெரிவித்துள்ளது. 16 வயதான “கைய்ல் ஹோவாட் “  ஸ்கார்புரோவிலுள்ள கலைக்கான வெக்ஸ்போர்ட் கொலிஜியேற் பாடசாலையில்   11ம்  தரத்தில் பூரணத்துவம் பெற்றிருக்கிறார்.   அவர் ஒரு திறமையானவரும் சிறந்த மாணவரும் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று  ரொறொன்ரோவின் கிழக்குப் பகுதியில் உள்ள “வூட்பைன்” கடற்கரையில்  சுழியினால் இழுத்துச் செல்லப்பட்டு  தண்ணீரில் தத்தளித்த  தாயையும் மகனையும் காப்பாற்ற தண்ணீரில்  குதித்த   ...

Read More »

சவூதியின் விமானக் குண்டுவீச்சில் குழந்தைகள் பலி

யெமென் மீது சவூதி நடத்திய விமானக்குண்டு வீச்சில்  பல குழந்தைகள் பலியாகியுள்ளார்கள். யெமென் நாட்டில் குழந்தைகள்  இரத்தக் காயங்களுடன்  தெருக்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பல குழந்தைகள்  புழுதிப் படலங்களுக்குள்  அசைவின்றி தெருக்களில் கிடக்கிறார்கள். வெள்ளைத் துணியினால் சுற்றப்பட்ட  இறந்துபோன பல குழந்தைகளின் உடல்களை வைத்தியர்கள் பெற்றுக்கொண்டுள்ளார்கள். அதிஸ்டவசமாக காயங்களுடன் மட்டும்  உயிர் தப்பிய குழந்தைகள் சில சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். சில குழந்தைகள்  முதுகில் பாடசாலைப் பைகள்  அணிந்தபடி இறந்து கிடக்கிறார்கள். அமெரிக்காவின் பின்னணியில் சவுதி அரேபியா வட யெமெனில் விமானக் குண்டுவீச்சுகளை நடத்துகிறது. கடந்த ...

Read More »

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் “நைபால்” காலமானார்

நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் வி.எஸ்.நைபால் மேற்கிந்திய தீவுகளில் உள்ள ட்ரினாட் நகரில் 1932-ம் ஆண்டு பிறந்தார். அவரது முழுப்பெயர் முழுப் பெயர் வித்யாதர் சுராஜ் பிரசாத் நைபால் என்பது ஆகும். இங்கிலாந்தில் உள்ள  Oxford பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்த நைபால் லண்டனில் வசித்து வந்தார். 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய  A House for Mr Biswas   என்ற நாவல் பிரபலமான ஒன்று. 1971-ம் ஆண்டு  In a free state என்ற ...

Read More »

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்

தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தில் தீவிரம் அடைந்து உள்ளதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியதுடன், அதில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றின் 2 கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக ஈரோடு மாவட்டம் ...

Read More »

கேரளாவில் 54,000 பேர் வீடிழந்துள்ள‌னர்

54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, கோட்டயம், ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தின் 24 அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இதனால் அணைகளையொட்டிய தாழ்வான பகுதிகள் மற்றும் ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டதாலும், சாலைகளை வெள்ளம் ...

Read More »

மேட்டூர் அணைக்கு நீரின் வருகை குறைந்தது.

மேட்டூர் அணைக்கு நீரின் வருகை 1.33 லட்சம் கனஅடியாக இன்று குறைந்துள்ளது. தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் இந்த ஆண்டு காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை கடந்த மாதம் நிரம்பியது. காவிரி டெல்டா பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் கேரளா, கர்நாடகாவில் பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. ...

Read More »

குழந்தையைக் காப்பாற்றிய சிரிய அகதி

ஹமில்ரன் நகரில் வீட்டுக்கூரை மேல் நின்றிருந்த  குழந்தை ஒன்றை  சிரியா  அகதி  ஒருவர் காப்பாற்றியுள்ளார். சிரியா நாட்டைச் சேர்ந்த “காலிட்” என்ற 18 வயதான இளைஞர் தனது தந்தையுடன் ஹமில்ரன் நகரில் காரில் சென்று கொண்டிருந்தபோது “கிங்“ வீதி யில் கிழக்குப் பகுதியில்  “டயப்பர்” மட்டும் அணிந்த நிலையில்  குழந்தை ஒன்று  இரண்டாவது மாடியின் கூரையில் நின்று தவிப்பதைக் கண்டுள்ளார். தூக்கத்திலிருந்து விழித்த குழந்தை  இரண்டாவது மாடியில் யன்னலூடாக கூரையில் இறங்கி திரும்பவும் உள்ளே செல்ல முடியாமல் சுவரைப்பிடித்தபடி நின்றுகொண்டிருந்தது. காரை நிறுத்தும்படி தனது ...

Read More »

அணில் குஞ்சிடம் அகப்பட்ட ஒருவரை பொலிசார் காப்பாற்றியுள்ளனர்,. 

தன்னை தனியாக இருக்க விடாமல்  ஒரு அணில்குஞ்சு துரத்துவதால் தனக்கு உதவி செய்யும்படி  ஒருவர் பொலிசாரை அழைத்துள்ளார் ஒரு சிறிய அணில் குஞ்சு வீதியில் தன்னைத் துரத்துவதாக கடந்த வியாழக்கிழமை  ஒருவரிடமிருந்து  அவசர உதவிப் பிரிவுக்கு  தொலைபேசி அழைப்புக் கிடைத்துள்ளது. ஜேர்மனியில்  “கார்ல்சுறுக்”  நகரில் இச்சம்பவம்  நடைபெற்றுள்ளது . அந்த நபரால்  அந்தச் சிறிய அணிலை விரட்ட முடியவில்லை., விரக்தி அடைந்த நிலையில் பொலிசாரின் உதவியை நாடியுள்ளார். அந்த இடத்திற்கு பொலிசார் சென்றபோது அந்த அணில்குஞ்சு அவரை தொடர்ந்தும் விரட்டிக்கொண்டிருந்ததைக் கண்டனர். தொடர்ந்தும் அவரை ...

Read More »

This site is protected by wp-copyrightpro.com